சாய்ந்தமருது கமு/ லீடர் எம்.எச். எம் அஷ்ரப் வித்தியாலயத்துக்கு Multi Media வழங்கிவைப்பு..!

 மாளிகைக்காடு செய்தியாளர்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கல்வி உதவித்திட்டம் (Rizley Musthaffa Education Aid) மூலமாக தனது சொந்த நிதியில் இருந்து சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச். எம் அஷ்ரப் வித்தியாலயத்தின் வேண்டுகோளை ஏற்று பாடசாலையின் Smart Class Room க்கு தேவையாக இருந்த Multi மீடியா மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தனது கல்வி உதவித்திட்டம் (Rizley Musthaffa Education Aid) மூலமாக தனது சொந்த நிதியில் இருந்து இந்த Multi மீடியாவை வழங்கி வைத்தார்.

இந்த வித்தியாரம்ப விழாவில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.என்.எம்.ஏ. மலிக் கௌரவ அதிதியாகவும் மேலும் ஓய்வுபெற்ற சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம். றிஸ்வான், முன்னாள் பிரதி அதிபர் அப்துல் நிஸார், பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர்,  ஆசிரிய ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK