கெஹலியவின் பெயரில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது எப்படி..?

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, முன்னாள் அ​மைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயரில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல   சமூகத்திற்கு தவறான உதாரணத்தை காட்டி குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார்.

எனவே, உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஜோசப் ஸ்டார்லிங் வலியுறுத்தினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK