விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு

 

பாறுக் ஷிஹான்

மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு

மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு  கைது செய்து மன்றில்  முன்னிலைப்படுத்துமாறு  பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்  குறித்த வழக்கின் பிரதான சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு   வியாழக்கிழமை (15)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்   பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான்  அழிக்கப்பட்ட  காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள  மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.அத்துடன்  நீண்ட சமரப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை    எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்  உத்தரவிட்டார்.

மேலும்  அரச   பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சம்பவ தினம் இடம்பெற்ற மாணவனது மரணம் தொடர்பில்  பதிவு செய்யப்பட்ட  சிசிடிவி வன்பொருளில் சேமிக்கப்ட்டிருந்த காணொளிகள் மௌலவியின் உத்தரவின் பேரில்  அழிக்கப்பட்ட நிலையிவ்  அதனை மீள பெற்றுக்கொள்வதற்கு   நீதிவானின் உத்தரவிற்கமைய கடந்த நீதிமன்ற தவணைகளில்  அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அதற்கான தொழிநுட்பம் இன்மையினால்   வன்பொருள் மீள பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அரச   பகுப்பாய்வு திணைக்களத்தில் இரந்து மீள பெறப்பட்ட  சிசிடிவி வன்பொருளில்  அழிந்த காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள  மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உள்ள கணனி  தொழிநுட்ப பிரிவிற்கு அனுப்பி அழிக்கப்பட்ட காணொளிகளை பெற வேண்டும் என மரணமடைந்த மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மன்றிற்கு  விண்ணப்பம் செய்தார்.இதனை அடுத்து நீதிவான் குறித்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.


அத்துடன் சம்பவ தினம்  பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காணொளிகளை வன்பொருளில்  அழித்த  சிசிடிவி தொழிநுட்பவியலாளரை  ஏன் பொலிஸார்  கைது செய்யவில்லை என்ற வாதப்பிரதிவாதம் மன்றில் சட்டத்தரணியினால்  ஆட்சேபனை முறையில்  முன்வைக்கப்பட்டது.இதன்போது பொலிஸார் குறித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை அரச சாட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்றில்   தெரிவித்தனர்.எனினும் நீதிவான் குறித்த வழக்கின் மேலதிக விசாரணைக்காக  குறித்த சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு  கைது  கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக   சட்டத்தரணி  ஷஃபி எச். இஸ்மாயில்  ஆஜராகி மன்றில்   இவ்விடயம் தொடர்பில் நீண்ட சமர்ப்பணம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 

13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த செவ்வாய்க்கிழமை (5)   மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 












News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK