ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் போது அர சாங்கத்தின் கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.

இதன்படி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற திறப்பு விழாவை மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மரியாதை அணிவகுப்பு, மரியாதைக் காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK