நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது கொவிட் மரணம்: மீண்டும் அதிகரிக்கும் தொற்று


கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் போது கொவிட் -19 நிமோனியாவால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


உயிரிழந்தவரின் சடலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கடந்த (23) திகதி கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK