விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

“தர்மம் தவறாத ஊடகப்பணிகளை முன்னெடுத்த சிறந்த முன்மாதிரி பி.எம்.ஏ.காதர்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!


நாடறிந்த ஊடகவியலாளரும் நல்லுள்ளம் கொண்டவருமான பி.எம்.ஏ.காதரின் மரணச் செய்திகேட்டு கடுங்கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“எனக்குத் தெரிந்தவரை மர்ஹும் பி.எம்.ஏ.காதர் மிக மரியாதையுடன் பழகும் ஒருவர்


. அவரைச்சுற்றி பெரிய நண்பர் வட்டமே வளருமளவுக்கு அவரது நற்குணங்கள் வித்திட்டன. தர்மம் மீறாமலும் கடமை தவறாமலும் ஊடகப்பணிபுரிந்த உத்தமரென்றும் இவரைச் சொல்லலாம்.


மக்களின் பிரச்சினைகள், சமூகத்தின் சவால்களை தைரியமாக எழுதி தீர்வுகாண முயற்சித்த இவரது பணிகளை நான் பாராட்டுவேன். மருதமுனைக்கு கடந்த வாரம் சென்றிருந்தபோது, அவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்து, அவரது இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்தேன். அப்போது எனது கையை இறுகப்பற்றிக்கொண்டார். அடிக்கடி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுவார். 

Advertisement - செந்தீ குறும்படம் | Senthi Short Film 

சமூக அரசியலுக்கான அரசியலில் எந்தப்பாதை செல்வதென்ற தெளிவும் மர்ஹூம் காதரிடமிருந்தது. உணர்ச்சி அரசியலின்றி யதார்த்த வழிமுறைகள்தான் நடப்பு சவால்களுக்கு தீர்வென்ற தெளிவும் இவரிடமிருந்தது.

இறைவனின் தவணை நெருங்கியதால் அவர் எம்மைவிட்டுச் சென்றுவிட்டார். அன்னாரது நல்ல பணிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக..! அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு பொறுமையை வழங்குவானாக..! ஆமீன்...!”

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK