ரணிலின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! மொட்டுக் கட்சி கடும் சீற்றம்


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என்று தெரியவருகின்றது.

இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதியின் வியூகம்

எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை மொட்டுக் கட்சி செய்து வரும் சூழ்நிலையிலேயே மொட்டுக் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான வியூகத்தை ஜனாதிபதி அமைத்துள்ளார். அத்துடன், மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK