காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மாநாட்டில் இலங்கை இளைஞர்களின் பிரதிநிதியாக ஹஸீப் மரிக்கார்.

காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 28ஆவது மாநாடு (COP28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இலங்கை நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாநாட்டில் பல்வேறுபட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் மற்றும் சுற்றாடற்றுறை அமைச்சர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் உலகளவில் பாரிய சவாலாக இருக்கின்ற காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றன.
BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK