தோப்பூரின் 2வது பெண் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக செல்வி சிபா பர்வீன்

இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உயர்  நீதிமன்றத்தில் 2023.12.07 ஆந் திகதி வியாழக்கிழமை  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

தோப்பூரின் இரண்டாவது பெண் சட்டத்தரணியான இவர் தனது கல்வியினை தோப்பூர் பாத்திமா முஸ்லீம்  மகளீர் கல்லூரியில் பயின்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்திற்குத் தெரிவாகினார். இவர் அங்கு #ஆங்கில மொழி மூலத்தில் சட்டமாணி பட்டப்படிப்பினில் சிறப்பு சித்தி பெற்று சிறப்புச் சட்டமாணிப் பட்டத்தையும் [LLB(Hons)] பெற்றுக்கொண்டார்.

சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படும்  , சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையிலும் தோற்றி  சித்தியடைந்துள்ள இவர் உயர் நீதிமன்ற  சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மிகக்குறைந்த வயதில் சட்டத்தரணியான இவர் 

 காலஞ் சென்ற முன்னாள்  சிறைச்சாலை  உத்தியோகத்தர் கபீபு முகமட் முகமட் அலி மற்றும் சித்தி நயீமா முகமட் அலி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியுமாவார்.


இவரின் மூத்த சகோதரியான முகமட் அலி பாத்திமா மன்சிபா என்பவர் தோப்பூரின் முதலாவது பெண்  சட்டத்தரணி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK