தவறிழைக்கும் MP க்களுக்கும் இனி ஆப்பு - வருகிறது புதிய சட்டமூலம்


தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக, தமது பதவியின் கௌரவத்தை பாதுகாக்க தவறுகின்ற மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம் என்ற பெயரிலான குறித்த சட்டமூலம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமான குழுவொன்றின் ஊடாக தண்டனை விதிப்பதற்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான ஏற்பாடுகளும் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK