பொத்துவில் உப பஸ் டிப்போவானது பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான நிகழ்வு


முஷாரப் எம் பி  அவர்களின் பெரும் முயற்சியினால் பொத்துவில் உப பஸ் டிப்போவானது பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான நிகழ்வு கடந்த  ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

முஷாரபின் எம் பி  அழைப்பின் பேரில் பிரதம அதிதிகளாக போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டு பிரதான பஸ் டிப்போவை திறந்து வைத்தனர்.

கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டபிள்யு டி வீரசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், தேசிய அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பொறியியலாளர் குசான் தேவிந்தா மற்றும் அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பொத்துவில் பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சரினால் நவீன சொகுசு பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் அதிதிகளினால் நட்டி வைக்கப்பட்டது.

பொத்துவில் உப பஸ் டிப்போவானது பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் அமைச்சு மட்டத்தில் எட்டப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக பொத்துவில் பஸ் டிப்போவில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திக்கென பணம் ஒதுக்குவதில் பல சிரமங்கள் காணப்பட்டன.

குறித்த காலப் பகுதியில் பொத்துவில் பஸ் டிப்போ அமைந்துள்ள நிலத்தின் சட்ட ரீதியான உரிமை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முஷாரப் எம் பி  மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக பஸ்டிப்போவுக்காக உரிமம் சட்டரீதியாக வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பஸ்டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபாவினை  முஷாரப் எம் பி   அவர்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்  கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK