தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர் வகித்து வந்த பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வெற்றிடமான பசறை ஆசனத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன அமைப்பாளர் பதவி லெட்சுமணன் சஞ்சய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உரிய நியமனக் கடிதத்தை சஞ்சய் பெற்றுக்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், பசறை இளைஞர்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK