நீதியரசர்கள் தொடர்பில் அறிக்கை கோரும் செயற்பாட்டை இடைநிறுத்த மனு தாக்கல்


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சில நீதியரசர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசியலமைப்பு பேரவையினால் பிரதம நீதியரசரிடம் வினவும் தீர்மானத்தின் செயற்பாட்டை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்வதற்காக ஜனாதிபதியினால் நீதியரசர்கள் பரிந்துரைக்கப்பட்ட சூழலில் அரசியலமைப்பு பேரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மீறப்படும் உரிமைகள்


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சில நீதியரசர்கள் தொடர்பான கேள்வித்தாளை நவம்பர் 14ஆம் திகதி அரசியலமைப்பு சபை, பிரதம நீதியரசரிடம் சமர்ப்பித்ததாக இந்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சபையால் தலைமை நீதியரசருக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் உண்மையில் முறையற்றது அத்துடன் முறையான நீதி நிர்வாகத்தின் செயல்பாட்டில் கடுமையான மீறல் என்றும், இதன் விளைவாக மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட சில அலுவலகங்களுக்கு நியமனம் செய்வதற்கான கட்டாய நடைமுறையை ஜனாதிபதி சட்டத்தின் ஊடாக கொண்டிருக்கிறார் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK