பழைய மாணவர் சங்க கடிதத் தலைப்பை பயன்படுத்தி போலிப் பிரச்சாரம்.

மாகொல முஸ்லிம் அநாதை இல்ல பழைய மாணவர் சங்கத்தின் கடிதத் தலைப்புடன் கூடிய கூகுல் விண்ணப்பப்படிவம் ஒன்றினை இணைத்து, 'தந்தை இழந்த பிள்ளைகளுக்கு மாதம் 8000 ரூபாய்' எனும் தலைப்பில் சமூக வலைத் தளங்களில் பரப்பபப்டும் செய்தியில் எவித உண்மையும் இல்லை என பழைய மாணவர் சங்க செயலாளர்  முனவ்வர் காதர்  Flash News க்கு தெரிவித்தார்.

அவ்வாறான எந்த அறிவிப்பையும் தமது சங்கம் வெளியிடவில்லை எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் தமது சங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், மாகொல முஸ்லிம் அநாதை இல்ல பழைய மாணவர் சங்க செயலாளர்  தெரிவித்தார்.

இணைய விண்ணப்பப் படிவத்தை தயாரித்து, அநாதை சிறுவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகள், திட்டமிட்ட  குழுவொன்றினால் சேகரிக்கபப்டுவதாக சந்தேகிக்கும் மாகொல முஸ்லிம் அநாதை இல்ல பழைய மாணவர் ச‌ங்கம்,   அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், தமது சங்கத்துடன் தொடர்பு அற்ற குறித்த விண்ணப்பம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும், அந்த விண்ணப்பம் தொடர்பில் தமது சங்கம் எந்த்த பொறுப்பினையும் ஏற்காது எனவும் பழைய மாணவர் சங்க செயலாளர்  தெரிவித்தார்.

மாகொல முஸ்லிம் அநாதை இல்ல பழைய மாணவர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த் நடவடிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும்  தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK