ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும் 5 மாதங்களுக்குள் புதிய மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளது