பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்கட்சியில்


பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்கட்சியில் ஆசனம் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் நோக்கில் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் தொடர்பிலான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாகவும், பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ள போதிலும், பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இவ்வாறானதொரு கடுமையான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுக்க வேண்டுமென பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மாவட்டத் தலைவரும் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இக்கலந்துரையாடலில் இறுதித் தீர்மானத்தை எட்டுவது தொடர்பில் மேலும் பரிசீலித்து தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்திற்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK