கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் கடமையில் இருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழிந்த பொலிஸ் சார்ஜன்டின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தரின் பெற்றோர் நேற்று (06) பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு 103,808 ரூபா மற்றும் 125,000 ரூபா பணமாக வழங்கப்பட்டது.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிருடன் இருந்து சேவையில் இருப்பதாக கருதி 55 வயது வரையிலான மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அரசாங்கத்தின் அனைத்து சம்பள மாற்றம் மற்றும் சம்பள அதிகரிப்புகளுடன் வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.