தெம்பிரியத்தேவலயில் விவசாய நிலங்கள் அபகரிப்பு - இஷாக் ரஹுமான் எம்.பி. களத்திற்கு நேரடி விஜயம்

 

ஐ.எம். மிதுன் கான்

ஹொரொவ்பொத்தான தெம்பிரியத்தேவல கிராம மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்கள் மற்றும் வீடுகள் அமைத்து வசித்து வந்த நிலங்கள் என்பன வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுவருகின்றமை குறித்து அப்பிரதேச மக்கள் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களுக்கு அறியப்படுத்தியிருந்தனர். அத்தோடு சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டு வரும் தமது இடங்களை தமக்கு மீளப்பெற்றுத்தரும்படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் ஹொரொவ்பொத்தான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளோடு 31.08 வியாழக்கிழமை குறித்த கிராமத்துக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களோடு கலந்துரையாடியதோடு பிரச்சினைக்குள்ளான நிலங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது ஊர் மக்கள் தாம் பாதிக்கப்படும் விதம் தொடர்பில் விளக்கியதோடு, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது பக்க நியாயங்களை முன்வைத்ததனர்.

விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் தெம்பிரியத்தேவல கிராமத்தில் அதிகளவான விவசாய நிலங்கள் இவ்வாறு எல்லையிடப்பட்டு கையகப்படுத்தப்படுவதால் ஊர் மக்களினது அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்படும் என்பதனை கருத்தில்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் வன ஜீவராசிகள் தினைக்களத்தின் டிரக்ட்டர் ஜெனரால் உடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு இப்பிரதேச மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்ற வன ஜீவராசிகள் தினைக்களத்தின் டிரக்ட்டர் ஜெனரால் விடயம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தீர்மானம் எடுப்பதாகவும் செப்டம்பர் இரண்டாம் வாரத்திற்குள் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் நேரடியாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். அது வரை தெம்பிரியத்தேவல பகுதியில் வன ஜீவராசிகள் தினைக்களத்தின் எல்லை நிர்ணய பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தியோகத்தர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்ததோடு உத்தியோகத்தர்களும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK