கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. அண்ட்ரூ பட்ரிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2023 ஆகஸ்ட் 23ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு.

2023 ஆகஸ்ட் 23