3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள பணிப்புரை...!


இலங்கையின் சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற  கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அதன்படியில் , 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் தாதியர் சேவையில் ஏறக்குறைய 2500 பயிற்சியாளர்களையும் 500 தாதி பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது 

மேலும், கடந்த ஜூலை மாதம், 3315 பேர் தாதியர் மாணவர்களாக பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்,  அவர்கள் 2018 / 2019 ஆம் ஆண்டு உயர்தர முடிவுகளின்படி தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு இலங்கையில் தாதியர் பயிற்சி பெறும் மாணவர் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 6700 ஆகும்.

உலகளாவிய கொவிட் அனர்த்தம் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் தாதியர் ஆட்சேர்ப்பில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் தாதியர் ஆட்சேர்ப்பை உரிய முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

குறிப்பாக உயர்தரப் படிப்பை முடித்து இவ்வாறான சேவைகளை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகள் மிகுந்த நம்பிக்கையுடன் அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறான சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக சாதகமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாதியர் சேவையில் இடமாற்றம் செய்வதற்கு முறையான இடமாற்ற நடைமுறையை பின்பற்றவும், பல வருடங்களாக ஒரே வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களை பரிந்துரைக்க வேண்டும். முறையான முறையில் இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, மேலதிக செயலாளர் (நிர்வாகம் II) ஏஎம் வத்சலா பிரியதர்ஷனி, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் II) எச். சாமிக்க கமகே மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK