இந்தியா, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பயங்கரமான ரயில் விபத்து தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பி்டுள்ளதாவது,

"ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்து பற்றி கேள்வியுற்று நான் மிகவும் வருத்தமடைந்தேன். நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவுகொண்ட இந்தக் கொடூர விபத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்