"Slave Island" என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக 'கொம்பன்ன வீதிய' என மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
பெயரை மாற்றுவதற்கு உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
"Slave Island" (ஸ்லேவ் ஐலண்ட்) என்ற ஆங்கில பதம் தமிழில் 'அடிமைத்தீவு' என்ற அர்த்தத்தை வழங்குகிறது.
எனவே, அந்த பெயரை மூன்று மொழிகளில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) உச்சரிக்க வசதியாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அஞ்சல்மா அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin