தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் – கருணாகரம் எம்.பி


தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். அதன் பின் தலைகணம் இல்லாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 5 கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இருந்து நீக்கள் வேறுபட்டதாக இன்று பிரச்சாரம் செய்கின்றீர்கள்.2010 ஆம் ஆண்டுக்கு பின்பு அரசியலுக்கு வந்து இன்று தமிழ் மக்களுக்கும், உங்களது கட்சிக்கும், தலமை தாங்க முயற்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு இருகின்றதா. இந்த மக்களுக்காக ஒரு நாளாவது பட்டினி கிடந்துள்ளீர்களா. காயப்பட்ட போராளிகளின் இரத்தத்தையாவது கண்டிருப்பீர்களா அல்லது அவர்களை தூக்கியிருப்பீர்களா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாக தான் பயணித்து. இன்று தமிழரசுக் கட்சி வெளியேறுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிந்து விடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கூறுகின்றீர்கள். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அப்படி கூறவில்லை.

சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்படி கூறவில்லை. ஆனால் எப்படி உங்களால் கூற முடியும். நாங்கள் முக்கியமான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கிறது. சர்வதேசத்தின் உதவியை நாடியிருக்கின்றது. இந்தியா பெரும் அழுத்ததை கொடுக்கிறது.

13 ஆவது திருத்த சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கிறது. மெல்ல மெல்ல இலங்கை அரசு அதை நோக்கி நகர்கின்றது. எங்களுடன் பேசுவதற்கான காலங்கள் கனிந்து வருகிறது. நாங்கள் பிரியக் கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தலின் பின் இணைந்து செயற்படுவோம் என்கிறார்கள்.

அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். அதன் பின் தலைகணம் இல்லாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
(நன்றி – உதயம் )

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK