துருக்கி வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் உண்மைத்தன்மை என்ன?

நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்து 1500 பேரை  துருக்கி நாட்டுக்கு வேலைக்காக  அனுப்புவாதக்காக ஏற்பாடுகளை செய்து இருக்கும் வேளை அதனை குழப்புவதகாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கத்தின் தலைவர் உட்பட பலர் முயச்சி செய்த போதே இந்த பதற்றமான சூழல் உருவானதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமானின் ஊடக செயளாளரும் நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்தவருமான மித்துன் கான்  தெரிவித்தார்.

நான் என்னுடனுடன் கதைத்த அனைவருக்குக்கும் வெளிநாடு  செல்வத்துக்கு 500,000 ரூபா செலவாகும் எனவும் அதனை தேசிய சேமிப்பு வங்கி ஊடாக கடனாக பெற்று தரப்படும் எனவும் தெளிவாக தெரிவித்தாக கூரினார்

வியாபார போட்டியே இதற்கு காரணம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழு வராமல் இருந்தால் துருக்கி நாட்டவர் வருகை தந்து   இந்த நேர்முக தேர்வு இடம்பெற்று இருக்கும் எனவும் இது தொடர்பான விசாரணை மற்றும்  வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் இரவு 9.30 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேரியதாகவும்  அவர்  தெரிவித்தார் 

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமானின் கருத்து

துருக்கி நாட்டில் அதிகப்படியாக வேலைவாய்ப்புகள் உள்ளது என்பது உண்மை நாம் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்த வேண்டும். கடன் அடிப்படையில்  தேசிய சேமிப்பு வங்கி ஊடாக வெளிநாடு செல்ல தேவையான பணம் கிடைக்கும் எனவே அதனை மாதாந்த அடிப்படையில் செலுத்த முடியும் இந்த வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் என்னுடைய நெருங்கிய நண்பர் ஏன்று தெரிவித்தார்


வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்து 

“துருக்கியில் சில வேலை வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த வகையான போலி வேலை மோசடிகளுக்கு இரையாவதை விட, எங்கள் அதிகாரப்பூர்வ சேனல்களைப் பின்பற்றுமாறு வேலை தேடுபவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகம், தூதரகமோ அல்லது துருக்கிய உள்துறை அமைச்சகமோ மனிதவள ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகவோ அல்லது தொடர்புடையதாகவோ இல்லை என்று கூறியுள்ளது.

“இலங்கையில் துருக்கிய ஆட்சேர்ப்பு செய்து வருவதாக சமூக ஊடகங்களில் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தூதரகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கோ அல்லது துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கோ இது போன்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்பில்லை, இது சில தனிப்பட்ட நபர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்று துருக்கிய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு சமூக ஊடகப் பதிவைப் பார்த்து, துருக்கிய வேலைக்கான இலவச நேர்காணலுக்காக இலங்கை முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 1000 நபர்கள் கொழும்புக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


    

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK