தீர்ப்பின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 10 கோடி ரூபாவை செலுத்துவதற்கு தன்னிடம் பணபலம் இல்லாததால், அந்த தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும், மக்கள் செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“.. 10 கோடி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் எனக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 10 கோடி கொடுக்க என்னிடம் பண பலம் இல்லை. 10 கோடி மக்களிடம் இருந்து வசூலிக்க நான் எதிர்பார்த்திருக்கிறேன். என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் சிறைக்கு செல்வேன்.

சகோதரனாக இருந்தும் எனக்கும் டட்லி சிறிசேனவின் வியாபாரத்துக்கும் தொடர்பில்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர். தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர்களும் 03 ஏக்கர் நிலமும் இருந்தது. ஐந்து ஏக்கர் நெல் வயல்களை சகோதரிகள் பகிர்ந்து கொண்டனர். 03 ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டுள்ளேன். வேறு வருமானம் எனக்கு இல்லை..”