2022 உயர்தரப் பரீட்சை இருந்த போதிலும் இலங்கை மின்சார சபை தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை முதல் நாடு முழுவதிலும் 2,200 நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.