முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது