மத்தள சர்வதேச விமான நிலைய செலவுகள் வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் ...!


மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவு (செயல்பாட்டுச் செலவு) 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 3656 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையும் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


மத்தள விமான நிலையத்தின் 2021ஆம் ஆண்டு வரிக்குப் பிந்திய நிகர நட்டம் 400 கோடி ரூபாவாகவும், 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வரிக்குப் பிந்திய நிகர இழப்பு 2000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என கணக்காய்வுத் திணைக்களத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் தொண்ணூற்றாயிரத்து எழுநூற்று நாற்பத்தேழு பயணிகளே வந்துள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.

விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட 19 கோடி அமெரிக்க டொலர் கடனுக்கான வட்டி உட்பட வருடாந்த கடன் தவணையாக 261 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை நிறுவனம் செலுத்தியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK