தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரியில்" நிர்மாணிக்க்கப்பட்ட  புதிய பள்ளிவாயல் கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க Global Ehsan Relief நிறுவனத்தின் அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.வஸீம் அவர்களின் முயற்சியில் அந்நிறுவனத்தின்  பணிப்பாளர் முஹம்மத் ஜரூக் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதியொதிக்கீட்டின் கீழ் கஹட்டகஸ்திகிலிய, துருக்குறாகம "தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரியில்" நிர்மாணிக்க்கப்பட்ட  புதிய பள்ளிவாயல் கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 2022.12.23 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர் சஹீத், சமூக சேவையாளர் ARM தாறிக், நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் தலால் அஹமட்,  ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆதில் மற்றும் அஸ்பாக்  உற்பட,  துருக்குறாகம பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், கிரிப்பாவ பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவர், பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK