சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தியசாலையின் பணிகளை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ். திலகரத்ன உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin