எல்பிட்டிய-பிட்டுவல பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதிப்பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவிற்கு அருகில் வேகமாக வந்துள்ளது

பஸ் மிதிபலகையில் பயணம் செய்த குறித்த பாடசாலை மாணவன் திடீரென தரையில் விழுந்ததோடு, பஸ் முன்னோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தில் சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.