வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடங்கியது


வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.


வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த சேவைகள் மீள ஆரமப்பிக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும், ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடையுமின்றி இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய சேவை பெறுநர்கள், தங்களின் சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தூதுரக சேவைப் பிரிவு 0112 33 88 12 அல்லது 0112 33 88 43

யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் – 021 22 15 970

திருகோணமலை பிராநதிய அலுவலகம் – 026 22 23 182

கண்டி பிராந்திய அலுவலகம் – 0812 38 44 10

குருநாகல் பிராந்திய அலுவலகம் – 0372 22 59 41

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin