கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 4 பேர் கைது


கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுடன் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான 21 கிராம் 121 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மகசீன் மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி களனி, பட்டிய ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் வெல்லம்பிட்டிய மற்றும் மோதர உயன கொழும்பு 15 பிரதேசங்களைச் சேர்ந்த 37 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், இரண்டு பெண்களும் மோதர உயன கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக பெஹலியகொடை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin