உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிமல் ஜி. புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பிறகு தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK