கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கோழிப் பண்ணையாளர்கள் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டால், கட்டுப்பாட்டு விலை அவசியமில்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் குறையும் என கூறியுள்ளார்