பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரண்டும் இருப்பு இல்லை எனவும், இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார் .


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் சாந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.