இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் மாத்திரம் சுமார் 30,000இற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31,105 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 89,775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.