இலங்கைக்கான பயண ஆலோசனையை இலகுபடுத்தியது சுவிஸ்


 அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த்தை தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகளை இலகுபடுத்தியுள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் இந்த்த் தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் (SLAITO) பாராட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்து எமக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். குறிப்பாக குளிர்காலத்தில் சுவிஸ்டர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை சிறந்த பயண இடமாக பார்ப்பதாக இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்தார்.

இதன் மூலம் சுவிட்ஸர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் என்றும் விஜேதுங்க சுட்டிக்காட்டினார்.

சுவிட்ஸர்லாந்து அரசாங்கம், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது குடிமக்களுக்கு பரிந்துரை செய்திருந்த்து.

அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

இலங்கைக்கான பயணத்திற்கு முன்னரும், பயணத்தின் இடைநடுவிலும் சமகால சூழ்நிலை, ஊரடங்குச் சட்டங்கள் குறித்து ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஆராயுமாறும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தனது குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK