பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடை இறுதித் தவனைக்குள் வழங்க நடவடிக்கை


 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான சீருடைத்துணி 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவணைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் சீனக் குடியரசுக்கு விண்ணப்பிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத்துணித் தேவையின் ஒருபகுதியை இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சீனக்குடியரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK