எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளது - எரிசக்தி அமைச்சு


 நாட்டில் QR  முறைமை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையிலான எரிபொருள் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதால் தேசிய சேமிப்பிற்கும் வழிவகுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் இதுவரை 6 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 93% எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த வேலைத்திட்டம் செயற்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 20,000 மெட்ரிக் தொன் எடை கொண்ட மசகு எண்ணெய் கப்பல் விரைவில் வரவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 40 நாட்களில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அதன் அதிகபட்ச கொள்ளளவைக் கொண்டு இயங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK