கடமைகளை சரியாக செய்யாத அரச ஊழியர்கள் சேவையை விட்டு வெளியேற வேண்டும் - ஜனாதிபதி தெரிவிப்பு


 கடமைகளை சரியாக செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமாகும் என குறிப்பிட்டார்.

மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் மாகாணப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தாமதிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப தன்னுடன் கைகோர்க்குமாறு, தான் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கு புதிய அரசியல் கருத்துருவும் ஒழுக்கமான அரசியல் பயணமும் தேவை என வலியுறுத்திய ஜனாதிபதி, பழைய ஆட்சி முறை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடிமட்டத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK