கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது.


 கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்


மாணவரொருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், பாடசாலை நடத்தும் விதம் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிகாட்டல்கள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும், இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin