முச்சக்கரவண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,

அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் முச்சக்கரவண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேகர, முச்சக்கர வண்டியில் முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் இன்று முதல் 120 மற்றும் 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீற்றருக்கு 100 ரூபாவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் மீற்றர் முச்சக்கரவண்டிகள் முதல் கிலோ மீற்றருக்கு 120 ரூபாவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபா என கட்டணத்தை உயாத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.