கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (20) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 4 பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது