2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சிசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, 2 ஆயிரத்து 438 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.