அரச ஊழியர்கள் வெளிநாடுகளில் தொழில்புரியும் வகையில் சுற்றுநிருபம் வெளியிட அமைச்சரவை அனுமதிசிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச சேவையாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சுற்றுநிருபம் வெளியிட அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.


ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாகவே சில அரச சேவையாளர்கள் வெளிநாடு சென்று சேவைகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை.


இதன்படி, தற்போதைய சட்டத்தில் விரைவில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய சுற்றுநிருபத்தை வெளியிடவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK