கொள்கலன் (Container) போக்குவரத்து கட்டணங்களை 10% இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (27) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் துறைமுகங்களிலிருந்து கொள்கலன்களை போக்குவரத்து செய்வதற்கு இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (26) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.