அலி சப்ரி ரஹீம் எம்.பியின் வாகனம் மோதி ஒருவர் பலி!


புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் மகிழுந்து மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் அந்த வாகனத்தில்  பயணித்துள்ளதாக பொலிஸாரின்  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்தநிலையில்,  சாரதி கைது செய்யப்பட்டு நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post