பதட்டமான சூழ்நிலையில் பாராளுமன்றம் கூடுகிறது

2/3 பெரும்பான்மையை அரசு இழக்கும் நிலை

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  தலைமையில்  கூடுகிறது.

  இன்றைய அமர்வின்போது பல்வேறு தின பணிகள் நிகழ்ச்சி நிரலில் ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தாலும், அரசியல் பதட்டம் ஏற்படும் நிலை இருக்கின்றது.

   அரசாங்கத்தின் அமைச்சர்கள் இராஜினாமா செய்திருக்கிறார்கள். தற்காலிக அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கு ஆசனம் எவ்வாறு ஒதுக்கப்பட போகின்றது என்பது பொதுமக்களிடம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 அதேவேளை, அரசாங்கத்தின் இருந்து தனித்து செயல்பட தீர்மானிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் செல்லுமா?அல்லது ஆளும் கட்சியில் இருந்து தனித்து செயல்படுமா? இதுவும் ஒரு பரபரப்பாகவே பேசப்படுகின்றது.

   இதே நேரம், நிகழ்ச்சிநிரலில் சொல்லப்படாத விடயமாக, அவசரகால நிலை பிரகடனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணையும் முன்னெடுக்கப்பட கூடிய சாத்தியம் இருக்கிறது.

 நாட்டில் உருவாகி இருக்கின்ற அரசியல் பதட்ட நிலையில், அவசரகால நிலையை எதிர்த்து ஆளுங்கட்சியில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கலாம் என்ற நிலை இருக்கின்றது. பெரும்பாலும் இந்தப் பிரேரணையை தோற்கடிக்க படமா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த நிலையில் பிரேரணை வெற்றி பெறுமா என்பது  கேள்விக்குறியாக இருக்கின்றது.

 இன்னும் சொற்ப வேளையிலே, முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் போது நிலைமைகளை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும்.Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK