விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகுவதே ஒரே தீர்வு-இம்ரான்


ஜனாதிபதியும் அமைச்சராவையும் பதவி விலகுவதே ஒரே தீர்வு என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் யுத்தம் இல்லை, பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை,  கொவிட் இல்லை.ஆனால் இன்று ஒரு குடும்பத்தை பாதுகாக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது

ஜனாதிபதியும் பிரதமரும் அவரின் குடும்பத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக நாட்டு மக்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துகின்றனர்.

நாட்டை காக்க வந்த வீரராக தன்னை அடையாளப்படுத்திய ஜனாதிபதி இன்று சமூக வலைதளத்தை கண்டு பயந்துவிட்டார்.

கொவிட் தொற்றின் போது நாட்டை மூடி மக்களை பாதுகாக்குமாறு நாம் எவ்வளவோ கேட்டுக்கொண்ட போதும் நாட்டை முடக்காமல் முட்டியை உடைத்தவர்கள் தமது குடும்பம் என்று வந்தவுடன் நாட்டை முடக்கியுள்ளனர்.


தேசிய அரசாங்கமோ அமைச்சரவை மாற்றமோ இதற்கு தீர்வல்ல. ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகுவதே ஒரே தீர்வு.மக்களின் தீர்ப்பின்படி புதிய ஜனாதிபதியும் பாராளுமன்றமும் தெரிவுசெய்யப்பட்ட வேண்டும் என தெரிவித்தார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK